தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர்..!!விழாக்கோலத்தில் நாடு முழுவதும்!

தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர்..!!விழாக்கோலத்தில் நாடு முழுவதும்!

சிங்கப்பூர்: ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்படவுள்ள சிங்கப்பூரின் 61-வது தேசிய தினத்தை (National Day Parade 2026) முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

“Majulah Singapura, Go Beyond!” என்ற கருப்பொருளுடன் நடைபெறவுள்ள இந்தாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான இறுதிக்கட்டப் பயிற்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சி ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முக்கியச் சிறப்பம்சங்கள்:
👉தேசிய அரங்கில் பிரம்மாண்ட அணிவகுப்பு:
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய தினத்தின் பிரதான அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் கல்லாங் பகுதியில் உள்ள National Stadium-ல் நடைபெறுகின்றன.

👉முதன்முறையாக இன்டோர் டிரோன் ஷோ: தேசிய அரங்கின் உள்ளே அதிநவீன விளக்குகளுடன் கூடிய வண்ணமயமான Indoor Drone Light Show பார்வையாளர்களை கவரவுள்ளது.

👉கல்லாங் பேசினில் சிறப்பு நிகழ்வுகள்:
Presidential Gun Salute துப்பாக்கி முழக்க மரியாதை மற்றும் State Flag Flypast விமான அணிவகுப்பு ஆகியவை கல்லாங் பேசின் பகுதியில் மிக நெருக்கமாகக் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

👉பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகள் & வாணவேடிக்கை:
முன்னணி உள்ளூர் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், கண்கவர் ஒளிக்காட்சிகள் மற்றும் வானை அலங்கரிக்கும் பிரம்மாண்ட வாணவேடிக்கைகளுடன் ஆகஸ்ட் 9 மாலை தேசிய விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இதனையொட்டி, சிங்கப்பூரின் முக்கிய சாலைகள், அரசு கட்டடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் தேசியக் கொடிகள், சிவப்பு–வெள்ளை அலங்காரங்கள் மற்றும் ஒளி அலங்காரங்களால் மிளிர்ந்து வருகின்றன.