பரபரப்பு..!!! சிங்கப்பூரில் கார் கவிழ்ந்து விபத்து...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தோ குவான் சாலையில் கார் ஒன்று கவிழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
வெள்ளை நிற கார் ஒன்று நிறுத்தத் தயாராகும் போது திடீரென்று சறுக்கி, நடைபாதையில் கவிழ்ந்தது.
இந்த விபத்து நேற்று (07.08.25) இரவு 8:05 மணியளவில் தோ யுவான் சாலையில் உள்ள பிளாக் 285A அருகே உள்ள சாலையில் நடந்தது.
டிக்டாக் பயனர் smaffis பதிவிட்ட காணொளியின்படி, வெள்ளை நிற கார் வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து இறுதியில் நடைபாதையில் கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது.