FIFA 2026: நுழைவு சீட்டு விலை உயர்ந்ததா..??

FIFA 2026: நுழைவு சீட்டு விலை உயர்ந்ததா..??

கால்பந்து போட்டிக்கான நுழைவு சீட்டு விலை தற்போது மாற்றமடைந்துள்ளது.

ஜூன் 11ஆம் தேதி நடைபெறும் ஆரம்ப ஆட்டத்தின் மூன்றாவது பிரிவிற்கான நுழைவுச்சீட்டின் மறு விற்பனை விலையானது தற்போது விலை ஏற்றமடைந்து $5,324 தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதனுடைய உண்மையான விலை நிர்ணயமானது $895 தொகையாகும்.

ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தின் மூன்றாவது பிரிவிற்கான நுழைவுச்சீட்டின் மறு விற்பனை விலை கிட்டத்தட்ட பன்மடங்கு அதிகரித்து $143,000 மதிப்பாக உயர்ந்துள்ளது.

இதனுடைய உண்மையான மதிப்பானது தற்போது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட 41 மடங்கு குறைவாகும்.

இந்த நுழைவு சீட்டு முதலில் 3,450 வெள்ளிக்கு விற்பனை செய்யப்பட்டது. மிகவும் மலிவான நுழைவுச் சீட்டின் விலையானது மறு விற்பனை தளத்தில் $9,775 ஆகும்.

ஒரு சில குறிப்பிட்ட நுழைவுச்சீட்டுகளின் விலை மட்டும் குறைந்து இருக்கிறது ஆனால் அத்தகைய சம்பவங்கள் மிகவும் அரிதானதே ஆகும்.

பலரும் மறுவிற்பனை செய்வதற்காகவே நுழைவுச்சீட்டுகளை வாங்கியுள்ளதாக ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் இறுதியாக பாதிக்கப்பட விருப்பது கால்பந்து ரசிகர்கள் தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK