2030 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான கட்டணங்கள்..!! FIFA மறுபரிசீலனை
2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்த நிலையில், 2030 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான (FIFA World Cup – 2030) நுழைவுச் சீட்டுக் கட்டணங்களை மறுபரிசீலனை செய்வதற்கு FIFA திட்டமிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு போட்டிக்கான கட்டணங்கள் வட அமெரிக்காவில் மிக அதிகமாக உள்ளதால், 2030-ல் விலை நிர்ணய உத்தியை மாற்றுவதற்காக பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு (2026) கட்டண உயர்வு குறித்து ஐரோப்பிய காற்பந்து ரசிகர் மன்றம் நுழைவுச் சீட்டு விலை கொள்ளை அடிப்பதற்கு சமம் என்று FIFA – வை மறைமுகமாக சாடியுள்ளது.
ஐரோப்பிய காற்பந்து ரசிகர் மன்றத்தை எதிர்த்து FIFA நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் அதிக தேவை இருப்பதையும் கட்டணங்கள் பிரதிபலிப்பதாய் FIFA கூறியுள்ளது.
ரசிகர்களின் கருத்துக்களைக் கேட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் இந்த விலை மாற்றங்கள் செய்வது குறித்து ஆராய உள்ளதாகவும் FIFA தெரிவித்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகளின் மூலம் 13 பில்லியன் டாலர் வருவாயீட்ட FIFA இலக்க வைத்துள்ளது. இது கால்பந்து மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எனவும் FIFA கூறியுள்ளது.
2030- இல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுமாம் வகையில், போட்டியை 48 அணிகளாக விரிவுபடுத்தவும் FIFA திட்டமிட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் ஏற்பாடுகள் மற்றும் கட்டணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் 2026 ஆம் ஆண்டு டிசம்பரில் சூரிச்சில் நடைபெறும் FIFA கூட்டத்திற்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.