விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்…!!!

விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்...!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து புறப்பட்ட லுஃப்தான்சா விமானம் எதிர்பாராத விதமாக போஸ்ட்டனுக்கு திருப்பி விடப்பட்டது.

Business Class எனும் சொகுசுப் பிரிவில் பயணித்த பயணியின் ipad அவரது இருக்கைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது.

461 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம் ஜெர்மனியின் மியூனிக் நகரில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும், இருக்கையில் சிக்கிய ipad சேதமடைந்ததற்கான அறிகுறிகளைக் காட்டியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் திருப்பி விடப்பட்டது.

சேதமடைந்த ipad அதிக வெப்பமடைந்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்தது.