குறைவான காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் விற்பனைக்கு வருகிறது! எங்கு எத்தனை வீடுகள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

குறைவான காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் விற்பனைக்கு வருகிறது! எங்கு எத்தனை வீடுகள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் வீட்டு அமைப்பு வளர்ச்சி கழகம் இம்மாதம் 4600 எஞ்சிய வீடுகளின் விற்பனையை தொடங்க உள்ளது.

அவற்றில் 1733 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடிபுகும் நிலையில் உள்ளது.

ஜூலை மாதம் 3000 எஞ்சிய வீட்டு விற்பனைக்கு மட்டுமே இதற்கு முன் அதிகாரிகள் திட்டமிட்டு இருந்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சர் தெரிவித்தார்.

இது இவ்வாண்டின் இரண்டாவது எஞ்சிய வீட்டு விற்பனை.

பிப்ரவரி மாதம் 5590 எஞ்சிய வீட்டு விற்பனைக்கு மித மிஞ்சிய வரவேற்பு இருந்தது.

அந்த வீடு களுக்காக 22,000 அதிகமான விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருந்தன.

இவை தவிர இம்மதம் 5500 புதிய வீடு பிடிஓ வீடுகளும் விற்பனைக்கு விடப்படும் என்று அமைச்சர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்த வீடுகள் புக்கிட் மேரா, புக்கிட் பாஞ்சாங்,கிளமெண்டி,தெம்பனிஸ்,தோ பாயோ, செம்பவாங்,உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் கட்டப்படும்.

புதிய 5500 வீடுகளில் 1400 வீடுகள் மூன்றாண்டுக்கும் குறைவான காத்திருப்பு காலங்களைக் கொண்டிருக்கும் என்றும் அவை கிளமண்டி கொக்கி பஞ்சாங்கம் பிடிஓ திட்டங்களில் இடம் பெற்றிருக்கும் என்றும் அமைச்சர் அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கிளமெண்டி எமரால்ட் திட்டத்தில் கட்டப்படும் 753 வீடுகளுக்கான காத்திருப்பு காலம் 34 மாதங்கள்.

அதேபோல பங்கிட் பிரீஸ் திட்டத்தில் இடம்பெறும் 643 வீடுகள் 35 மாதங்கள் காத்திருப்பு காலம் கொண்டிருக்கும்.

செம்பவாங் வெஸ்ட் வட்டாரத்தின் முதல் பிடிஓ வீடுகளும் இம்மாதம் விற்பனையில் இடம்பெறும்.
ஈரறை ஃபிளெக்ஸி மூவரை நாலரை மற்றும் ஐந்தரை வீடுகளுடன் மூன்றாம் தலைமுறை வீடுகளும் அடங்கிய செம்பவாங் பீக்கன் திட்டம் தொடங்கப்பட உள்ளது அந்த திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்காக காத்திருப்பு காலம் 3 ஆண்டுகள்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு பிறகு சீமெய் வட்டாரத்திலும் புதிய பிடிஓ வீடுகள் கட்டப்பட உள்ளன.

சீமெய் ரோட்டுக்கும் அப்பர் ஜாங்கி ரோடு ஈஸ்ட் க்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் 380 இரண்டு அறை ஃபிளெக்ஸி வீடுகளும் நாலரை மற்றும் ஐந்தரை வீடுகளும் கட்டப்பட உள்ளன.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan