சிங்கப்பூர் தேர்தல் துறையின் முக்கிய அறிவிப்பு..!!
சிங்கப்பூரில் இன்றளவும் தேர்தல் நடத்தப்படும் முறையானது, தொழில்நுட்ப முறைப்படி வாக்குகள் பதியப்படாமல் வாக்குச்சீட்டுகள் மூலமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் 1954 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் சட்டத்தின் படி தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் மற்றும் தேர்தல் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பை தேர்தல் துறை செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.
இந்த முறைப்படி 2025 மே மாதம் மூன்றாம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி துவாஸ் தெற்கு கழிவு எரிப்பு ஆலைக்க அழிக்க அனுப்பப்படும்.
அதுவரை வாக்குச்சீட்டுகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அடங்கிய அனைத்து பெட்டிகளும் உச்ச நீதிமன்றத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முறையை பின்பற்ற காரணம் வாக்களிப்பு செயல்முறையின் ரகசிய தன்மையை உறுதி செய்வதற்காக என தேர்தல் துறை கூறியுள்ளது.
எரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்படும் வாக்குச்சீட்டுகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை எரிக்கும் போது காண்பதற்காக தேர்தல் விவகாரத்துறையானது, வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகளை அழைப்பர்.
தேர்தல் நடந்து முடிந்த பிறகு இந்த நடைமுறையானது கடைபிடிக்கப்படுகிறது.