மலேசியா–சிங்கப்பூர் இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை..!!!
பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு விஜயம் செய்து, ரமலான் நோன்பு திறப்புக்குப் பிறகு அன்வர் இப்ராஹிமுடன் இரவு உணவு உட்கொண்டார். 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட அரசு விருந்தினர் மாளிகையான ஸ்ரீ நெகாராவில் இந்த முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
1913ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மாளிகை, மறுசீரமைப்புக்குப் பிறகு கடந்த டிசம்பரில் மீண்டும் திறக்கப்பட்டது. 1948 மலாயன் யூனியன் ஒப்பந்தம் மற்றும் 1957 சுதந்திர ஒப்பந்தம் கையெழுத்தான வரலாற்றுச் சுவடுகளையும் இந்த இடம் தாங்கி நிற்கிறது.
சந்திப்பு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் மலேசியா–சிங்கப்பூர் உறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவது குறித்து வெளிப்படையாக விவாதித்தனர்.