அனைத்து உலக விலங்குகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நம்பப்படும் 26 வயது அடைக்கல சாமி வடிவேல் கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த ஜூலை 13 அன்று கைது செய்யப்பட்டார்.
அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் சரக்கு பகுதிகள் அனுப்பும் பயணப்பெட்டியில் 2500 க்கும் அதிகமான சிகப்பு காதுடைய சிலைடர் ரக ஆமைகளை அவர் பெட்டிக்குள் அடைத்து கடத்த முயற்சி செய்ததாக தெரிகிறது.
விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த ஆடவர் ஒருவரிடம் அந்த ஆமைகளை தான் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த ஆடவர் கூறியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்திய அதிகாரிகள் அந்த ஆமைகளை சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பினர் 2500க்கும் மேற்பட்ட அத்தகை ஆமைகளில் 300-க்கும் மேற்பட்டவை உயிர் பிழைக்கவில்லை என்றும் சிங்கப்பூர் தேசிய பூங்கா வாரியம் குறிப்பிட்டது.
உயிர் பிழைத்த ஆமைகள் பின் பூங்காவாரியத்துக்கு அனுப்பப்பட்டன அங்கு ஆமைகளை சோதித்த பொழுது அந்த ஆமைகளுக்கு உயிர் கொல்லி வைரஸ் நோய் பரவி இருப்பதாகவும் அது மனிதர்களுக்கு சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் தேசிய பூங்கா கழகம் கூறியுள்ளது.