சிங்கப்பூரில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக 300 பேரிடம் விசாரணை!!

சிங்கப்பூரில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக 300 பேரிடம் விசாரணை!!

சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய இரண்டு வார நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர்.

16 முதல் 75 வயதுக்குட்பட்ட 214 ஆண்கள் மற்றும் 95 பெண்கள் உட்பட 300 பேர் விசாரணையில் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த 309 பேரும் முதலீடு, இணையதள காதல், வேலை, நண்பர் ஆள்மாறாட்டம், இ-காமர்ஸ் மோசடி போன்ற பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்தேக நபர்கள் 1,600 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் S$9 மில்லியன் தொகையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மோசடி செய்தல், பணமோசடி செய்தல், உரிமம் இல்லாமல் பணம் செலுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு கைதான நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைவிதிக்கப்படலாம். அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.