ஏர் இந்தியா விமான விபத்து பற்றி சிங்கப்பூர் பிரதமர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்!!

ஏர் இந்தியா விமான விபத்து பற்றி சிங்கப்பூர் பிரதமர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்!!

அகமதாபாத்தில் இருந்து 230 பயணிகளுடன் (இந்தியர்கள்-163 , பிரிட்டிஷ்-53 , கனேடியர்-01 , போர்த்துக்கீஷியர்கள்-07 , இதில் 2 கை குழந்தைகள் மற்றும் 11 சிரார்கள் அடங்குவர்) லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்தியாவிற்கு இரங்கல் அனுசரித்து வருகின்றனர்.

அதில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வண்ணம் சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் ஓங் அவர்கள் அவரின் முகநூல் பக்கத்தில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

விமான விபத்து குறித்து பிரதமர் திரு லாரன்ஸ் ஓங் கூறியது ” ஏர் இந்தியா விமான விபத்து பற்றிய செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.மேலும் இந்த இறப்பு தனது நெஞ்சையே உலுக்குகிறது.இந்த துயரமான நேரத்தில் இறந்தவர்களில் குடும்பத்தினருக்கும் இந்தியா மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

பாதிக்கப்பட்ட நாட்டிற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சிங்கப்பூர் எபோதும் துணை நிற்கும் எனவும் கூறினார். பாதிக்கப்பட்ட மற்ற நாட்டவர்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்தார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan