தட்டம்மை தடுப்பூசி கட்டாயம்..!! யாருக்கு..??

தட்டம்மை தடுப்பூசி கட்டாயம்..!! யாருக்கு..??

சிங்கப்பூரில் மற்றும் உலகமெங்கும் தற்போது தட்டம்மை நோய்கள் அதிகரித்து வருகின்றன.

சிங்கப்பூரில் சுமார் 13 பேருக்கு தட்டம்மை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாக்கப்பட்டது. இதில் சில தட்டம்மை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குழந்தைகள் ஆவர்.

எனவே 6 முதல் 11 மாத குழந்தைகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்ட பெற்றோர் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களும் தட்டாமை காண அறிகுறிகள் வெளிப்படும் நிலையில் நோயாளிகள் இருக்கிறார்களா என்பதையும் கவனத்துடன் ஆராய வேண்டும் என்பதை தொற்றுநோய் தடுப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் பயணம் மேற்கொண்டவர்களில் இருமல் காய்ச்சல் தடுப்புகள் போன்ற அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகத்தின் விவரங்களை 24 மணி நேரத்திற்குள் தொற்று நோய் தடுப்பு அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனவே சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளுக்கு செல்லுவதற்கு முன்பாக தட்டம்மைக்கு எதிரான MMR தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று தொற்றுநோய் தடுப்பு அமைப்பு கூறியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK