MRT ரயில்களில் வெப்பத்தை கண்டறிய புதிய சாதனங்கள்..!!

MRT ரயில்களில் வெப்பத்தை கண்டறிய புதிய சாதனங்கள்..!!

சிங்கப்பூரில் உள்ள MRT ரயில் வண்டிகளில் அச்சாணிகளில் ஏற்படும் வெப்பநிலையை கண்டறிவதற்காக புதிய செயல்முறை திட்டம் உருவாக்கப்பட்டது என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி கிழக்கு மேற்கு ரயில் தடத்தில் ஆறு நாட்களுக்கு சேவை தடை ஏற்பட்டுள்ளது. இதில் ‘axle rod’ எனப்படும் ரயில் வண்டி சக்கரங்களை இணைப்பதற்காக “அச்சாணிகள்” முக்கிய காரணமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி அவற்றினுடைய அதிகாரப்பூர்வ கொள்முதலுக்காக எடுக்கப்பட்ட குத்தகை மற்றும் ஒப்பந்த விண்ணப்பங்கள் GeBiz எனப்படுகின்ற அரசாங்க இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பங்கள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி பிற்பகல் 4:00 மணி வரையில் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறுக்கு வழி பாதைக்கான ஒப்பந்தம் தற்போது விண்ணப்பத்தில் உள்ளடங்காத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அதன் கட்டுமானம் என்னும் நடைபெற்று வருகிறது.

2030 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த வேலைப்பாடு முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஜூரோங் வட்டார ரயில் வழித்தடங்கள் வரும் 2027 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டிற்குள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் அச்சாணிகளில் இந்த வெப்பத்தை குறைப்பதற்கான கருவிகள் பொருத்தப்படும் பொழுது சேவை தடைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில் வண்டிகளில் அச்சாணிகளில் ஏற்படும் வெப்பநிலையை கண்டறியும் சாதனங்களை எம் ஆர் டி ரயில்களிலும் பொருத்த உள்ளதாக நிலப் போக்குவரத்தானையும் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK