COE விலையில் புதிய உச்சம்..!!!

COE விலையில் புதிய உச்சம்..!!!

சிங்கப்பூர்: செப்டம்பர் 3 (புதன்கிழமை) நடைபெற்ற சமீபத்திய ஏல நடவடிக்கைகள் சிறிய கார்களுக்கான உரிமைச் சான்றிதழ் பிரமியங்கள் சாதனை படைத்துள்ளது.

அனைத்து கார்களுக்கான பிரிமியங்களும் சுமார் $3000 அதிகரித்துள்ளன.

A வகை கார்கள் அல்லது 1600சி மற்றும் அதற்கு குறைவான குதிரை திறன் கொண்ட 130bhp க்கு மிகாமல் இருக்கும் கார்களுக்கான COE விலைகள் $107,889 இல் முடிவடைந்தது.

அக்டோபர் 2023 முந்தைய உச்சமான $106,000 ஐ எட்டியுள்ளது. கடைசி பயிற்சியின் போது பிரீமியங்கள் $104,524 இல் முடிவடைந்தன.

B பிரிவில் பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த கார்களுக்கான பிரீமியம் தொகை $124,400 இலிருந்து $127,501 ஆக உயர்ந்தன.

எந்த ஒரு வாகன வரைக்கும் பயன்படுத்தக்கூடிய திறந்த வகை COE கள் இறுதியில் பெரிய கார்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன அவற்றின் விலை $125,001 இலிருந்து $127,901 ஆக அதிகரித்துள்ளது.

சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட வணிக வாகனங்களுக்கான COE கள் முந்தைய ஏலத்தில் $72,190 இலிருந்து $71,556 ஆகக் குறைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் பிரீமியங்கள் கடந்த ஆண்டில் $8,809 ஆக பிறந்த நிலையில் $9,101 ஆக முடிவடைந்துள்ளது.

மொத்தம் 4,553 ஏலங்கள் பெறப்பட்டன. 3,144 COE களின் ஒதுக்கீடு கிடைக்கிறது.

ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான COE ஒதுக்கீட்டின் கீழ் 18,701 இடங்களுக்கான 3-வது டெண்டர் இதுவாகும். கடந்த ஆண்டு(2024) இதே காலகட்டத்தில் ஒதுக்கீடு 15,683 ஆக இருந்தது.

சீனாவில் மின்சார வாகனங்களின் பெரும் அளவிலான சந்தை அதிகரித்து வருவதோடு வீட்டு வருமானமும் அதிகரித்து வருவதே COE பிரீமியங்களின் அதிகரிப்பிருக்கும் காரணம் என போக்குவரத்து ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan