சிங்கப்பூரில் மின்-சிகரெட்டை ஒழிக்க அறிமுகமாகும் புதிய ஹாட்லைன்…!!!

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டை ஒழிக்க அறிமுகமாகும் புதிய ஹாட்லைன்...!!!

சிங்கப்பூர்: மின்-சிகரெட்டுகளின் சட்டவிரோத பயன்பாட்டை கட்டுப்படுத்த, சுகாதார அறிவியல் ஆணையம் நாளை (21.07.25) முதல் புதிய ஹாட்லைன் (6684 2036 / 2037) மற்றும் புகாரளிப்பு இணையதளத்தை (www.go.gov.sg/reportvape) அறிமுகப்படுத்துகிறது.

இவை தினமும் காலை 9 முதல் இரவு 9 வரை செயல்படும். QR குறியீட்டின் மூலம் அல்லது இணையதளத்தில் படிவம் நிரப்பியும் பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம்.

கடந்த ஆண்டு மின்-சிகரெட் மீறல்கள் குறித்த 3,000-க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்துள்ளன. சமூக ஊடகங்களில் இதைப் பற்றிய இடுகைகளும் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய நடவடிக்கைகள் அமலாக்கத்தை வலுப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan