இந்தியாவில் இன்று முதல்(ஏப்ரல் 1) அமலுக்கு வரும் புதிய விதிகள்..!!

இந்தியாவில் இன்று முதல்(ஏப்ரல் 1) அமலுக்கு வரும் புதிய விதிகள்..!!

இந்தியாவில் வருமான வரி, வங்கி சேவைகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் எரிபொருள் விலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய மாற்றங்கள் அமலுக்கு இன்று முதல் (ஏப்ரல் 1) அமலுக்கு வருகின்றன.

இந்த புதிய விதிகள் மூலம் மக்களுடைய நிதி மேலாண்மை சற்று பாதிப்படையும்.

இந்தியாவில் வரவுள்ள 13 முக்கிய விதிகள் பின்வருமாறு:
1. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: டிஜிட்டல் மோசடிகளை தடுப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக புதிய பாதுகாப்பு விதிகள் அமலுக்கு வருகின்றன.
2. வங்கி கணக்கு KYC: வங்கி கணக்குகளை புதுப்பிப்பதற்கான (KYC) கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

3. காப்பீட்டு விதிமுறை: காப்பீட்டு பாலிசிகள் வாங்குவதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
4. MUTUAL FUNDS இல் முதலீடு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் KYC -க்கான புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
5. ரயில்வே முன்பதிவு விதிகள்: ரயில்வே டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்வதற்கான புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
6. சொத்து பரிவர்த்தனை வரம்பு: சொத்து மற்றும் பண பரிவர்த்தனைக்கான வரம்புகளில் புதிய மாற்றங்கள் வந்துள்ளன.

7. ஸ்டோல் பிளாசா கட்டணம்: சில நெடுஞ்சாலைகளில் சுங்கவரி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
8. LPG விலை மாற்றம்: மாதம் தோறும் மாறும் LPG(சிலிண்டர்) விலையில் இந்த மாதத்தில் இருந்து புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9. ATM பணமதிப்பு விதிகளில் மாற்றம்: ATM இல் பணம் எடுக்கும் விதிகள் மற்றும் கட்டணங்களில் வங்கிகள் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது.
10. பான் ஆதார் இணைப்பு: பான் கார்டில் ஆதார் எண் இணைப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலற்றதாகிவிடும்.

11. வருமானவரி விலக்கு உச்சவரம்பு: புதிய வழிமுறையில் வரி விலக்கு உற்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பளம் வாங்குபவர்களுக்கு உதவும்.
12. புதிய வருமான வரி முறை: பழைய வழிமுறைக்கு பதிலாக புதிய வருமான வரி சட்டம் இயல்பு நிலையாக அமலுக்கு வருகிறது.
13. கட்டாய இ – ஃபைலிங்: சில குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளுக்கு வருமான வரி தாக்கல் செய்வது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள் குறித்த மேலும் தகவல்களை அறிந்து கொள்ள உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது வருமானவரி துறையின் வலைத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK