லக்னோ அணியில் மயங்க் யாதவிருக்கு பதில் களமிறங்கும் நியூசிலாந்து வீரர்...!!!

இந்தியாவில் நடைபெற்று வந்த 18வது ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் நாளை முதல் தொடங்க உள்ளது.நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதனால் வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். ஐபிஎல் தற்போது தொடங்கியுள்ள போதிலும், முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும்போது இது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்குகிறது. மேலும் தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருப்பதால் வெளிநாட்டு வீரர்களால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், லக்னோ அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயம் காரணமாக ஐபிஎல்லின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓரூர்க் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்தது. இதற்காக அவர் ரூ. 3 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
