மிகப்பெரிய விபத்து! கடலுக்குள் யாரும் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை! எங்கே எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

மிகப்பெரிய விபத்து! கடலுக்குள் யாரும் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை! எங்கே எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

ஜூலை 24ஆம் தேதி மாலை 5.41 மணி அளவில் துவாஸ் இரண்டாம் இணைப்பில் ரசாயனம் இருந்த கொள்கலன் கடலுக்குள் விழுந்தது.

மலேசியாவில் இருக்கும் துவாஸ் இரண்டாம் இணைப்பு பகுதியில் இரண்டு கனரக லாரிகள் மோதி கொண்டதைத் தொடர்ந்து இந்த விபத்து நேரிட்டது.

அதனால் ராஃபிள்ஸ் மரினாவின் சுற்று வட்டாரத்தை உள்ளடக்கிய துவாஸ் இரண்டாம் முனையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நீச்சல் பொழுதுபோக்கு காண மீன்பிடித்தல் போன்ற நீர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இவற்றில் ஈடுபட்ட மற்றொரு லாரி சீராக இருப்பதை தாங்கள் அறிவதாகவும் இரண்டாம் இணைப்பில் பாலத்தில் எந்தவித இரசாயன கசிவும் ஏற்படவில்லை என்றும் தேசிய சுற்றுப்புற வாரியம் facebook பக்கத்தில் தெரிவித்தது.

அந்த ரசாயனம் அபாயகரமான பொருளாக வகைப்படுத்தப்படவில்லை அந்த ரசாயனம் பொதுவாக உணவு மருந்து வகைகள் ஒப்பனை பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஒன்று என தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.

ஆனால் அந்த ரசாயனம் நீரில் இருக்கும் ஆக்சிஜன் அளவை குறைய கூடியவை என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.

அந்தப் பகுதியை சுற்றி இருக்கும் மீன் பண்ணைகளுக்கு விழிப்புடன் இருக்குமாறு தேசிய சுற்றுப்புற வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan