புத்தகம் இல்லா புத்தக கடை திறப்பு..!! எங்கே..??

புத்தகம் இல்லா புத்தக கடை திறப்பு..!! எங்கே..??

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் புதுவிதமான புத்தக கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. புத்தகம் இல்லா புத்தக கடை திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Audio Book எனும் ஒலி வடிவிலான புத்தகங்களை விநியோகம் செய்யும் “Audible” என்ற நிறுவனம் அந்தக் கடையைத் திறந்து உள்ளது. இந்த புத்தகமில்லா புத்தக கடை அடுத்த ஒரு மாதம் வரை செயல்பட உள்ளது.

புத்தகங்களுக்கு பதிலாக ஒலி வடிவிலானப் புத்தகங்கள் அடங்கிய கையடக்க கணினிகள் ( Tablet) அந்தக் கடையினில் வைக்கப்பட்டுள்ளன.

நாம் தேர்வு செய்யும் புத்தகத்தின் ஒரு சில பகுதியைக் கேட்பதற்கு காணொளி கருவிகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒலிப்பெருக்கி மூலமும் கதைகளைக் கேட்க ஒரு சிறப்பு பகுதியும் இருக்கிறது.

புத்தகத்தை முழுமையாக கேட்க “Audible” செயலியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புத்தகங்களை தேர்ந்தெடுப்பதற்கு ஆலோசனை வழங்கும் சேவையும் அங்கு கிடைப்பது இந்த கடையின் மற்றொரு தனி சிறப்பாகும்.

அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டில் ஒலி வடிவிலான புத்தகங்களின் விற்பனை சுமார் US$2.22 பில்லியன் (S$2.8 பில்லியன்) வரை எட்டியதாக கூறப்படுகிறது.

ஒலி வடிவிலான புத்தகங்களை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த கடை உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த Audible நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் அடையாளம் மே மாதம் முழுவதும் நியூயார்க்கின் லோயர் ஈஸ்ட் சைடில் உள்ள 260 போவரில் செயல்பட உள்ளது. இது போன்ற நவீன கடைகள் புத்தக வாசிப்பு முறையை டிஜிட்டல் உலகிற்கு எடுத்து செல்லும் ஒரு புதிய முயற்சி ஆகும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK