சிங்கப்பூரில் மோசடி தடுப்பு ஒத்திகை..!! 2000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!!

சிங்கப்பூரில் மோசடி தடுப்பு ஒத்திகை..!! 2000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!!

சிங்கப்பூரில் மோசடி அழைப்புகளை அடையாளம் காணும் வகையில் பொது மக்களுக்கு மோசடி தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பொதுமக்களின் திறனை மேம்படுத்துவதற்காக இணையப் பாதுகாப்பு பணியகம் இந்த நாடு தழுவிய பயிற்சியை தொடங்கியுள்ளது.

இந்த ஒத்திகையில் பங்கேற்க ஏற்கனவே 2000 -க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். மூத்த குடிமக்களுக்கு இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது மற்றும் இணையவழி மோசடிகளைத் தடுப்பது எப்படி என்று கற்பிப்பதற்காகவும் அதிகாரிகள் சமூக மன்றங்களில் இணையப் பாதுகாப்பு வகுப்புகளையும் நடத்தி வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வரும் Deep Fake காணொளிகள் மற்றும் மோசடிகள் போன்றவற்றை எவ்வாறு கண்டறிவது மற்றும் பாதுகாப்பான இணைய நுட்பங்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் இந்த ஒத்திகையில் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.

சில பங்கேற்பாளர்கள் போலியான மோசடி அழைப்புகளைப் பெற்று அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்ய பயன்படுத்தப்படும் முறைகளை நேரடியாக அனுபவித்து பொதுவான தந்திரங்களை பற்றி அறிந்து தங்கள் விழிப்புணர்வை அதிகரித்து கொண்டுள்ளனர்.

பங்கேற்பாளர்களில் கலந்து கொண்ட ஒருவர் எனது வங்கி கணக்கில் நிறையப் பணம் வந்திருப்பதாகவும், அதனால் நான் பணச்சலவை செய்வதாகவும் சந்தேகிப்பதாக மோசடிக்காரர்கள் கூறினார்கள். இது போன்ற அழைப்புகள் வரும்போது எனக்கு சற்று பதற்றம் ஏற்படுகிறது. வயதில் மூத்தவர்கள் இதில் பங்கேற்க பதிவு செய்வது சிறப்பாக இருக்கும் எனவும், நாங்கள் மேலும் மோசடிகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் இந்த ஒத்திகை உதவியாக உள்ளதாக கூறியுள்ளார்.

தானியங்கி குரல் அழைப்பு மோசடி சூழலை வடிவமைக்கும்போது, இணையப் பாதுகாப்பு நிறுவனம் இந்த உலக மோசடி வழக்குகளை மேற்கோள்காட்டி பங்கேற்பாளருடன் உரையாடுவதற்கும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுமாறு அவர்களை அழுத்தம் கொடுப்பதற்கும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திகிறது.

சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகமையின் இணையப் பாதுகாப்பு ஆலோசகரான, ஓங் யீ லிங் அவர்கள் இதில் கலந்துகொண்டு பேசுவேன், இந்த பயிற்சிக்கு பிறகு மோசடிகளின் அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து ஆலோசனை வழங்கும் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை இதில் பங்கேற்பவர்கள் அதிகாரிகளிடமிருந்துபெறுவார்கள்.

நாங்கள் செய்யும் இந்த மாதிரி அழைப்புகளுக்கு பதிலாக இந்த பயிற்சியின்போது உண்மையான மோசடி அழைப்புகளைப் பெறவும் வாய்ப்பு உள்ளதால் அனைவரும் எல்லா நேரங்களிலும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

போலி மோசடி அழைப்புகளை நேரில் அனுபவித்த பிறகு அந்த அழைப்புகளில் பயன்படுத்தப்பட்ட உள்ளடக்க முவும், அதில் கூறப்படும் தத்ரூபமான பொய்களையும் நிருபர்கள் கண்டறிந்துள்ளனர்.

சட்டவிரோத செயல்கள் குறித்த அச்சுறுத்தல்கள் கூட அதில் இடம்பெற்று இருந்தாலும், அழைப்பாளர்களிடையே ஒரு பதற்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் நடைமுறை தன்மையையும் ஈடுபாட்டையும் ஒருங்கிணைத்து மோசடிகளைப் பொதுமக்கள் விரைவாக அடையாளம் காணவும் ஏமாற்றப்படுவதை தவிர்க்கும் வகையிலும் உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK