அனைத்து உலக அமைதி குறியீட்டை தரவரிசை படுத்திய “ஐஇபி” எனப்படும் பொருளியல் அமைதிக்கான கழகம் பாதுகாப்பை பொருத்தவரை சிங்கப்பூர் உயரிய இடத்தை பிடித்ததாக கூறியுள்ளது.
கடுமையான சட்டங்கள் குறைவான குற்றச்செயல்கள் பாதுகாப்பான சுற்றுச்சூழல் ஆகியவை சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டில் பொது ஒழுங்கை உறுதிப்படுத்த உதவியாக உள்ளது என உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரின் தெருக்கள் வெளிச்சமாக உள்ளன என்றும், அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதால் வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்கள் எளிதில் நடந்திடவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
உலகின் ஆக அமைதியான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது பாதுகாப்பு நீடித்த போர் ராணுவ மயமாக்கம் ஆகிய மூன்று குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஐஸ்லாந்துக்கு அடுத்தபடியாக அயர்லாந்து நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அனைத்து உலக அமைதி குறியீட்டு பட்டியலில் சிங்கப்பூருடன் ஜப்பான் மலேசியா ஆகிய ஆசிய நாடுகளும் இடம் பிடித்துள்ளன.
இதில் ஜப்பான் 12ஆவது இடத்தையும் மலேசியா பதிமூன்றாவது இடத்தையும் பிடித்தன.
ஆசியாவின் மிக அமைதியான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் உள்ளது உலக அளவில் சிங்கப்பூர் ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.