டான் தற்போது சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காணொளி வழியாக பேசிய போது அவர் கழுத்துப் பட்டை அணிந்து படுக்கையில் படுத்திருந்தார்.
நீதிமன்றத்தில் அவர் “என் கால் வீங்கியிருப்பதால் நடக்க முடியவில்லை” என்று மாண்டரின் மொழியில் தெரிவித்தார். அதற்கு நீதிபதி,மருத்துவமனையில் மருத்துவர்களிடம் தேவையான சிகிச்சை பெறலாம் என்று கூறினார்.