சிங்கப்பூர் – இந்தோனேசியா புதிய ஒப்பந்தம்..!!

சிங்கப்பூர் - இந்தோனேசியா புதிய ஒப்பந்தம்..!!

சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதத்தில் புதிய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஆசியான் நீதிபதிகளுக்கான தொடக்க நீதித்துறை நல்வாழ்வு பயிர் அரங்கின் போது இரு நாடுகளுடைய தலைமை நீதிபதிகளும் இவ்விழாவில் பங்கேற்று ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது.

இந்த விழாவானது கையொப்பம் விடுவதற்காக நடத்தப்பட்டது எனவும், இன்று (மார்ச் 31ஆம் தேதி) சிங்கப்பூர் நீதிமன்றங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றங்களுக்கு இடையேயான வலுவான உறவில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றொரு முக்கிய ஒரு மைல்கல்லாக அமையும் என்று சிங்கப்பூர் நீதிமன்றங்கள் தெரிவித்து இருக்கின்றன.

நீதித்துறை ஒத்துழைப்பு குறித்த தங்களுடைய முதல் இருதரப்பு குறைந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை தொடர்ந்து, ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் இரு நாடுகளுடைய நீதித்துறை அமைப்புகளின் பகிரப்பட்ட உறுதிபாட்டை இது வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கடந்த நவம்பரில் நடைபெற்ற 12ஆவது ஆசியான் தலைமை நீதிபதிகள் மன்ற கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட “ஆசியான் நீதிமன்றங்களில் எல்லை தாண்டிய திவால் நிலை தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்கான மாதிரி கட்டமைப்பு” என்று அடிப்படையாக கொண்ட குறிப்பாக நியமிக்கப்பட்ட தொடர்பு மையங்களை நிறுவுவதன் மூலமாக திவால் நிலை மற்றும் மறு சீரமைப்பு துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இருக்கிறது.

சிங்கப்பூருக்கும் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட மூன்றாவது ஒத்துழைப்பு ஒப்பந்தம் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது 2021 இல் மலேசிய நீதிமன்றத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு திவால் நிலை ஒப்பந்தம் ஆகும்.

இரண்டாவதாக பிலிப்பைன்ஸ் உடன் கடந்த ஆண்டு(2025)  திவான் நடைமுறைகள் குறித்த தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

தற்போது இந்த ஆண்டான 2026 இல் சிங்கப்பூர் உச்ச நீதிமன்றமும் இந்தோனேசியா உச்சநீதிமன்றமும் மார்ச் 30ஆம் தேதி அன்று புரிந்தனர் ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK