சிங்கப்பூர் – ஜகார்த்தா செல்லும் விமானம் ரத்து..!! கருடா இந்தோனேஷியா நிறுவனம் மன்னிப்பு தெரிவித்த காரணம் என்ன..??

சிங்கப்பூர் - ஜகார்த்தா செல்லும் விமானம் ரத்து..!! கருடா இந்தோனேஷியா நிறுவனம் மன்னிப்பு தெரிவித்த காரணம் என்ன..??

சாங்கி விமான நிலையத்திலிருந்து மார்ச் 25ஆம் தேதி மதியம் 12:55 மணிக்கு ஜகார்த்தாவுக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்த கருடா இந்தோனேசியாவின் GA 829 விமானம் (பதிவு எண் PK-GFW) ஒன்றின் துணை மின் அலகில் திடீரென தீப்பிடித்ததை அடுத்த விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

பயணிகளை வெளியேற்றுவதற்கு உதவுவதற்காக அவசரகால வெளியேறும் சரிவு பாதைகள் பயன்படுத்தப்பட்டது.

விமான பயணங்களை கண்காணிக்கும் தளமான FlightAware இன் படி, சம்பவம் நடந்த அன்று அந்த விமானம் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவில்லை இதன் காரணமாக 24 மணி நேரம் கழித்து அதன் பிறகு தான் விமானம் புறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் இணையத்தில் இந்தச் செய்தியை பதிவிட்டுள்ளார்.

விமானத்தில் ஏறும் பணி முடிவடையும் தருவாயில் விமானம் முழுவதும் திடீரென மின்சாரம் தடைபட்டது பின்னர் விமான பணியாளர்கள் வெளியேறுமாறு சத்தமிட, பின்பக்க கதவில் இருந்த காற்றடைக்கப்பட்ட சரக்குப்பாதை கீழே இறக்கப்பட்டதால் அனைத்து பயணிகளும் காத்திருப்பு பகுதிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதை குறிப்பிட்டுள்ளார்.

தீ விபத்து பொருட்கள் வைக்கும் பகுதியில் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் உடனேயே சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் இணையவாசி கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு பல அவசர மீட்பு மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விமானத்தை சுற்றி இருந்தது துணை மின் அலகு கரி படலத்தால் மூடப்பட்டிருந்தது போல் தோன்றியது. இறுதியில் அந்த விமானம் சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஒரு தொலைதூர வாகன நிறுத்தம் இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.

கருடா இந்தோனேசியா இன்று (மார்ச் 27) காலை தனது முகநூல் பதிவில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த பதிவில் விமானம் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பா அபாயம் கண்டறியப்பட்டதாக விமான நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

இதனை அடுத்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்பதை குறிப்பிட்டது. விமானத்தில் ஏற்பட்ட சிரமத்திற்காக அந்நிறுவனம் ஆனது பயணிகளிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் பயணிகளின் புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றியும் தெரிவித்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட பயணிகளில் ஒருவர் சம்பவ இடத்திற்கு 5 தீமைப்பு வாகனங்கள் வந்ததாக சமூக வலைதளத்தில் தெரிவித்ததை சுட்டிக்காட்டி உள்ளது.

அனைத்து பயணிகளுக்கும் பழுது ஏற்பட்ட காரணத்தினால் மாற்று விமானங்களில் ஜகாத் தாவுக்கு பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் மேலும் சம்பந்தப்பட்ட விதிமுறைகளின் படி அவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் கருடா இந்தோனேசியா நிறுவனமானது தெரிவித்துள்ளது.

இந்த பதிவினை தெரிவிக்க காரணம், சமூக ஊடகங்களில் பரவி வரும் கருடா இந்தோனேசியா பயணிகள் விமானம் ஒன்று அதன் அவசர காலம் வெளியேறும் சரிவு பாதைகளை பயன்படுத்தும் பல புகைப்படங்களை பதிவிட்டதற்காக அதன் முழு விவரங்களையும் கூறியுள்ளதாக கருடா இந்தோனேசயா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK