சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் கருத்தரங்கம் - துணை அமைச்சர் பங்கேற்பு..!!!
சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் இரண்டு நாள் மனிதாபிமான கருத்தரங்கம் நடைபெற்றது.
கலாச்சார சமூக இளையர் துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் மனிதாபிமான சவால்களை கையாள சமூக அளவிலும் உலக அளவில் கூட்டு முயற்சி வேண்டும் என்று கூறியுள்ளார்.
மூப்படையும் மக்கள் தொகை பொருளாதார நிச்சயமற்ற நிலை எளிதில் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்கள் குடும்பங்கள் ஆகிய பிரச்சனைகளை சிங்கப்பூர் எதிர்நோக்கி கொண்டிருக்கும் சூழலில் இவர் இதைக் தெரிவித்துள்ளார்.
பத்தாம் ஆண்டு கருத்தரங்கில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
குடியரசின் சமூக சவால்களை கையாளுவதில் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளை பெருமையாக கூறியுள்ளார்.
காசாவுக்காக சுமார் இரண்டு மில்லியன் வெள்ளி நிவாரண நிதி திரட்டியது மியான்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண பணிகளை ஒருங்கிணைத்தது ஆகியவற்றையும் இவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
உலகளாவிய சவால்களை கையாள அரசாங்கம் நிறுவனங்கள் சமூகம் நன்கொடை வழங்குவோர் ஆகிய தரப்புகளின் கூட்டு முயற்சி தேவை என்று துணை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.