போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சரும் நிதிக்கான மூத்த துணை அமைச்சருமான சியூ சின் சியாங் தலைமையிலான சிங்கப்பூர் பிரதிநிதிகள் குழு, நேற்று (28.11.25) இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற 34வது சர்வதேச கடல்சார் அமைப்பின் பொதுச் சபைத் தேர்தலில் பங்கேற்றதாக தெரிவித்தது.
சிங்கப்பூர் மீண்டும் வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச கடல்சார் அமைப்பின் உறுப்பு நாடுகள் வழங்கிய தொடர்ந்த ஆதரவிற்கு சியூ சின் சியாங் நன்றி தெரிவித்தார்.
உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில், IMO-வின் முக்கிய பணிகளை முன்னேற்ற உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட சிங்கப்பூர் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.