சிங்கப்பூர் யூஓபி(UOB) வங்கியின் லாபம் சரிவு..!!! காரணம் தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும்.
சிங்கப்பூர்: புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் யுஓபியி வங்கியின் லாபமானது $1.48 பில்லியனாக இருக்கும் என்று நிபுணர்களின் கணித்திருந்தனர். ஜூன் 30ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கான நிகர லாபம் $1.34 பில்லியன். ஒப்புநோக்க ஓராண்டுக்கு முன்னர் அது $1.43 பில்லியனாக இருந்தது.
நிபுணர்கள் எதிர்பார்த்ததைவிட நிகர லாபம் குறைவாக இருந்தது. முதல் காலாண்டில் வங்கி $1.49 பில்லியன் லாபம் ஈட்டியது. இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் அதைக் காட்டிலும் 10 விழுக்காடு குறைவு. முந்தைய காலாண்டில் நிகர லாபம் குறைந்தே காணப்பட்டது.
ஆண்டின் முற்பாதிக்கு யுஓபி, ஒவ்வொரு பங்கிற்கும் 85 காசு ஈவுத்தொகை தருவதாகக் கூறியிருந்த நிலையில், ஓராண்டுக்கு முன்னர் வங்கியானது 85 காசு கொடுத்திருந்தது.
2025 பிப்ரவரி மாதம் ஒவ்வொரு பங்கிற்கும் பங்குதாரர்களுக்கு சிறப்பு ஈவுத்தொகையாக 50 காசு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு(2025) யுஓபி வங்கியின் நிகர லாபமானது, இரண்டாம் காலாண்டில் 6 விழுக்காடு குறைந்துள்ளது. லாபம் குறையக் காரணமாக யுஓபி வங்கி தெரிவித்ததாவது: ” வட்டிவிகிதம் குறைந்த காரணத்தினால் வட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாயும் குறைந்தது”.