சிங்கப்பூரில் 2027 வரை சிறப்பு சலுகைகள்..!!!
எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
சிங்கப்பூர்: VES எனப்படும் குறைவான கரியமில வாயுவை வெளியேற்றும் கார்களுக்கான திட்டத்தின் மூலம் சிங்கப்பூரில் சலுகை ஒன்று நீட்டிக்கப்பட உள்ளது.
VES திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது நிலப் போக்குவரத்து ஆணையம்.
20040 ஆம் ஆண்டிற்குள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத கரியமில வாயுவை வெளியேற்றாத வாகனங்களை உருவாக்குவதற்கு 100% இலக்கினை சிங்கப்பூர் முயற்சித்துள்ளது.
இந்த ஆண்டு (2025) ஜனவரியில் இருந்து ஆகஸ்ட் வரை பதிவு செய்யப்பட்ட புதிய கார்கள், டாக்ஸிகள் ஆகியவற்றில் கிட்டத்தட்ட 80 சதவீதம் கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றாத வாகனங்கள் உள்ளன என்று ஒரு கணக்கெடுப்பு தெரியவந்துள்ளது.
இந்த கணக்கெடுப்பின்போது கரியமில வாயுவை வெளியேற்றாத வாகனங்களில் பாதி மின் வாகனங்கள் ஆகும்.
சிங்கப்பூரில் மின் வாகனங்களை வாங்குவதற்கு கொடுக்கப்படும் சலுகைகள் இன்னும் இரண்டு ஆண்டிற்கு அதாவது, 2027 டிசம்பர் வரை நீட்டிக்கப்படும் என நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த சலுகை முற்றிலுமாக மின் வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
மேலும் பெட்ரோல் மின்சாரம் என இரண்டையும் பயன்படுத்தும் hybrid போன்ற கலப்பின வாகனங்களுக்கு இந்த சலுகை கிடையாது.