சிங்கப்பூரில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் 2024 ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் மானபங்க செயல்கள் குறித்த குற்றங்கள் அதிகமாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டு 1,427 வழக்குகள் பதிவாகி இருந்தது ஆனால் 2025 ஆம் ஆண்டு அதனை எண்ணிக்கையானது 1,531 ஆக உயர்ந்திருக்கிறது.

சிங்கப்பூரில் ஒரு நாளைக்கு நான்கு வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக தரவு மூலமாக தெரிய வந்துள்ளது.

அதேபோல் மார்ச் 17ஆம் தேதி அன்று உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் 29 வயதான ஷேக் ரவி முகமது ரிசா என்ற ஆடவர் 11 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டார்.

இந்த சம்பவம் மார்ச் 17 அன்று காலை 8 மணி அளவில் உட்லண்ட்ஸ் தெருவில் உள்ள 81 இல் நடந்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து மார்ச் 17ஆம் தேதி அன்று பிற்பகல் 3:30 மணியளவில் காவல்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து அதிகாரிகள் விரைந்து ரிசா என்பவரை உடனடியாக கைது செய்தனர்.

மேலும் ரிசாவை சாங்கி சிறை வளாகத்தில் இருக்கும் மருத்துவ நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

இது குறித்த வழக்கு விசாரணையானது ஏப்ரல் 9 ஆம் தேதி நடக்கும் என்பது தெரியவந்துள்ளது.

14 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமிகளை இது போன்ற மானபங்க செயல்கள் செய்பவர்களை ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும், அதனோடு பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK