தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கடந்த இரண்டு வாரங்களாக காவல்துறை தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தது.
குற்றவாளியை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் காவல்துறை திணறியது ஒரே ஒரு சிசிடிவி காட்சியை மட்டுமே வைத்து குற்றவாளியை தேடி வந்தது.
குற்றவாளியை பற்றி துப்புத் தருபவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் பரிசு அறிவித்திருந்தது தமிழக காவல்துறை.
இந்த நிலையில் இந்த கொடூரன் உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் என்று தெரியவந்துள்ளது இவர் சிக்கியது ஒரு சுவாரசியமான நிகழ்வு.
இந்த நிலையில் குடிபோதையில் கீழே விழுந்து காயமடைந்த இந்த இளைஞன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது காவல்துறை வெளியிட்ட புகைப்படத்துடன் உருவ ஒற்றுமை கொண்டவனாக இருப்பதாக சந்தேகப்பட்டு மருத்துவமனை ஊழியர்களால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு எண் 113/2025 அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குற்றவாளையின் அடையாளம் மற்றும் இந்த சம்பவத்தில் அவரது தொடர்பு கொடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது விசாரணை முடிவடைந்த பின்னரே இவர் உண்மையில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவரா என்பது உறுதியாகும் என காவல்துறை தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த இந்த சம்பவம் பொதுமக்களிடையேயும் அரசியல் கட்சித் தலைவர்களிடையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறை தீவிர விசாரணையும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் இந்த வழக்கில் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன மேலும் குற்றவாளியின் பின்னணி மற்றும் இந்த சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்து விசாரணை முடிவில் தெளிவாக தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.