தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்..!!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தொகுதி வாரியாக விநியோகம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி, 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.அதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும் முதற்கட்டமாக பரிசோதிக்கப்பட்டன.
தற்போது அதை மாவட்ட தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாப்பாக இருக்கின்றன. இந்த முறை 90,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் கோளாறு இருப்பது தெரிய வந்தால் உடனுக்குடன் அவை மாற்றப்படும் வகையில், அதிகமாக 20% இயந்திரங்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.