இணையத்தில் பரவி வரும் தீ விபத்து சம்பவம்..!! எங்கே நடந்தது..??

இணையத்தில் பரவி வரும் தீ விபத்து சம்பவம்..!! எங்கே நடந்தது..??

சிங்கப்பூரில் நேற்று(மார்ச் 29ஆம் தேதி) ஒரு குப்பை லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

ஆறு நாட்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கிய இரண்டு குப்பை லாரிகளின் அதே நிறுவனத்திற்கு சொந்தமான லாரி மீண்டும் தீப்பிடித்துள்ளது.

இது குறித்த புகைப்படமானது r/Singapore ரெட்டிட் என்ற சமூக ஊடக தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த பதிவில் பொங்கோல் சாலையில் உள்ள பிளாக் 103A-க்கு வெளியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு குப்பை லாரி தீப்பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஆனால் சம்பவ இடத்தில் புகை அதிகமாக பரவியதாக இணையவாசி மூலம் தெரியவந்துள்ளது.

இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் மூலமாக, குடிமை பாதுகாப்பு பணியாளர் ஒருவர் தீயணைப்பு குழாய்களை பயன்படுத்தி தீயை அணைப்பது தெரிகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து குடிமை தற்காப்பு படையினர் கூறியது: நேற்று (மார்ச் 29) மாலை சுமார் 6:25 மணி அளவில் குப்பை லாரி தீப்பிடித்தது என்று கூறியள்ளனர்.

என்ன டிவி பதில் ஒரு குப்பையில் ஆறு இன் பின்புற பகுதியில் இருந்த பொருட்கள் தீ பற்றி எரிவது தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மார்ச் 24 அன்று இரண்டு குப்பை லாரிகள் விபத்துக்குள்ளானதாகவும் அவற்றில் ஒன்று தீ விபத்து ஏற்பட்டது எனவும் மற்றொரு லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது எனவும் கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான இந்த லாரிகள் கோரா என்விரான்மென்ட் என்ற ஒரே கழிவு மேலாண்மை நிறுவனத்திற்கு சொந்தமானவை என்பதை இந்த நிலையம் கண்டுபிடித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK