சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதித்த அரசு..!! எந்த மாநிலத்தில்?

சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதித்த அரசு..!! எந்த மாநிலத்தில்?

உலக அளவில் தற்போது கைபேசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது சிறுவர்கள் தான்.

சிறுவர்கள் கைபேசி பயன்படுத்துவதால் சமூக ஊடகங்களில் அதிகமாக மூழ்கி விடுகின்றனர். இதனால் அவர்களுடைய படிக்கும் ஆர்வம் முழுவதுமாக குறைந்து வருகிறது.

இதன் விளைவாக தற்போது கர்நாடக அரசு ஆனது ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்திருக்கிறது. “புத்தகத்தை ஏந்து, கைபேசியை கைவிடு” என்ற பெயர் மூலமாக மாணவர்களிடையே புத்தக வாசிப்பை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை தற்போது கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.

அதிலும் முக்கியமாக 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்தக் கூடாது என்று கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிவிப்பை மாநில 2026 – 27 நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மார்ச் 6 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது தெரிவித்திருக்கிறார்.

பெங்களூருவில் நடந்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தின் போது சிறுவர்கள் மொபைல் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் சிறுவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்துவது குறித்த தடையை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி பிறகு இறுதியாக முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்தியாவில் சிறுவர்களுக்கு மொபைல் போனின் மூலம் சமூக ஊடகம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மாநிலமாக கர்நாடகா தற்போது உருவெடுத்துள்ளது. இந்நிலையில் உலக நாடுகளைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஏற்கனவே சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளன.

இதன் எதிரொலியாக தற்போது இந்தியாவில் சமூக பார்வையாளர்கள் இது குறித்த தாக்கங்கள் வெளியாகி வருகின்றன என்று கூறுகின்றனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK