கம்போடியாவில் நடந்த கொடூரம்..!!26 வயது தாய்லாந்து பெண் உயிரிழந்தது எப்படி..??

கம்போடியாவில் நடந்த கொடூரம்..!!26 வயது தாய்லாந்து பெண் உயிரிழந்தது எப்படி..??

கம்போடியா: தாய்லாந்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், தொழில்துறை பூங்காவில் வேலை வாய்ப்பு என்ற பெயரில் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ஆன்லைன் மோசடிக் குழுவில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், செயல்திறன் இலக்குகளை அடையத் தவறியதற்காக கொடூரமாக தண்டிக்கப்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது.

தாய்லாந்து ஊடகமான தி நேஷன் வெளியிட்ட தகவலின்படி, சுதா என்ற அந்த பெண் தனது கணவருடன் கம்போடியா பயணம் செய்த பிறகு குடும்பத்துடன் தொடர்பை இழந்தார். பின்னர் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.

அறக்கட்டளை மேற்கோள் காட்டிய அறிக்கையின்படி, சுதா இறப்பதற்கு முன்பு கொடூரமான உடல் ரீதியான தண்டனையை அனுபவித்தார்.அவர் கடுமையான உடல் தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், சுமார் 1,000 முதல் 2,000 வரை உட்கார்ந்து எழக்கூடிய உடற்பயிற்சியை செய்ய வலுக்கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் மின்சார அதிர்ச்சி அளிக்கப்பட்டும் அவர் உயிர்பிழைக்க வில்லை என்று கூறியது.

அவரது உடல் வியாழக்கிழமை(13.11.25) புனோம் பென்னில் உள்ள ஒரு கோவிலில் தகனத்திற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அறக்கட்டளை உடனடியாக தலையிட்டு தகனத்தை நிறுத்தி, தாய்லாந்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தது.

தற்போது, சுதாவின் உடல் புனோம் பென்னில் உள்ள தாய் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தூதரகம் அவரது உடலை தாய்லாந்துக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அவரது கணவரின் இருப்பிடம் இதுவரை தெரியவில்லை என்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK