சிங்கப்பூரில் கிங் மிங் திருவிழா ஆரம்பமாகிறது..!! எப்போது..??

சிங்கப்பூரில் கிங் மிங் திருவிழா ஆரம்பமாகிறது..!! எப்போது..??

சிங்கப்பூரில் இந்த ஆண்டு கிங் மிங் திருவிழா ஏப்ரல் 5- ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த திருவிழாவில் மார்ச் 21 முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரையில் ஏராளமான மக்கள் கல்லறைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பொது மக்களுக்கு நினைவு படுத்தியுள்ளது.

சோவா சூ காங் மற்றும் மண்டாய் கொலம்பரியங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்காக திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் பார்க்கின் இடங்களை முன்பதிவு செய்திருத்தல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் அவர்களின் மூதாதையர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான மக்கள் கல்லறைகளுக்கு செல்வார்கள் என்று இன்று (பிப்ரவரி 25) மதியம் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் சோவா சூ காங், மண்டாய் மற்றும் யிஷூன் கல்லறைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சோவா வாகனம் ஓட்ட திட்டமிடும் பொதுமக்கள் மார்ச் 9 முதல் ஆன்லைனில் பார்க்கின் இடங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மண்டை கல்லறைக்கு செல்ல நினைப்பவர்கள் மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை எந்த நாட்களிலும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை செல்ல திட்டமிடபவர்கள் மார்ச் 9 முதல் பார்க்கின் இடங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

வார இறுதி நாட்களில் கல்லறைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கல்லறைகளுக்கு செல்லும் போது பாதுகாப்பை கருத்தில் கொள்ளுமாறும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் சோவா சூ காங் மற்றும் மண்டாய் கொலம்பரியங்களுக்கான போக்குவரத்து தகவல்களை ஆன்லைனில் சரி பார்த்துக் கொள்ளலாம் மேலும் மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரையிலான காலகட்டத்தில் சாம்பல் சிதறல் சேவைகளை வழங்கும் கிங்சின் கார்டன் மற்றும் ஜிங்சின் கார்டன் தோட்டத்தில் சாம்பலை தூவுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கும் எனவும் இந்த 11 நாட்களில் உச்ச காலத்தில் மற்ற பொதுமக்கள் தோட்டத்திற்குள் நுழையலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK