"ஹென்டன் முகாமில் துயரம் – நீச்சல் பயிற்சியின் போது வீரர் உயிரிழப்பு"
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஹென்டன் முகாமில் இன்று (09.08.25) காலை 7:15 மணியளவில், தனியாக நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை வீரர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார்.
அவரை உடனடியாக மீட்டு CPR மற்றும் AED சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்பு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பயணத்தின் போதும் மருத்துவமனைக்கு வந்த போதும் மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து உயிர்காக்கும் சிகிச்சை அளித்தனர்.