ஹௌகாங் HDB குடியிருப்பு பகுதியில் நடந்த துயரச் சம்பவம்..!!!
சிங்கப்பூர்: ஹௌகாங் பகுதியில் உள்ள ஒரு HDB அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 23 வயது பெண் ஒருவர் விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீட்டு உதவியாளர் குழுவில் உள்ள ஒரு பேஸ்புக் பயனர் வெளியிட்ட வீடியோவில், HDB தொகுதியின் தரை தளத்தில் ஒரு பெண் படுத்திருப்பது தெரிகிறது. அவருக்கு அருகில் பல போலீஸ் அதிகாரிகள் நின்று கொண்டிருப்பதும், தொலைவில் நீல நிற கூடாரம் அமைக்கப்பட்டிருப்பதும் காணப்படுகிறது.