பன்னாட்டு மோசடி கும்பலுக்கு வேலை செய்த இருவர்..!! சிக்கியது எப்படி..??

பன்னாட்டு மோசடி கும்பலுக்கு வேலை செய்த இருவர்..!! சிக்கியது எப்படி..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அரசு அதிகாரிகளைப் போல நடித்து மோசடியில் ஈடுபட்டதாக இரு ஆண்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் தேதி,போலீஸ் சீருடை அணிந்திருந்த நபர் ஒருவர் தனது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக கூறி, ‘விசாரணைக்கு உதவ வேண்டும்’ என்ற பெயரில் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை ஒப்படைக்குமாறு கேட்டதாக ஒரு பெண் புகார் அளித்தார்.

அந்தப் பெண் முதலில் S$7,000க்கும் அதிகமான பணத்தை அடையாளம் தெரியாத ஒருவருக்கு மாற்றினார். பின்னர் S$53,000க்கும் அதிகமான மதிப்புள்ள தங்கத்தை வாங்கி, அதை மற்றொருவரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், 24 வயது உள்ளூர் நபர் ஒருவரையும், 47 வயது மலேசிய நபரையும் சந்தேக நபர்களாக அடையாளம் கண்டனர்.

மலேசிய நபர், 10ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் ஒரு முதலீட்டு நிறுவனத்தின் போலியான ஊழியர் அடையாள அட்டை போன்றவை கைப்பற்றப்பட்டது.

உள்ளூர் நபர் நேற்று (11.12.25) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து S$5,000 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் இந்த இருவரும் பன்னாட்டு மோசடி கும்பலின் வழிகாட்டுதலின்படி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை சேகரித்து, அதை அடையாளம் தெரியாத பிற நபர்களிடம் ஒப்படைத்ததாக தெரியவந்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK