வியாழக்கிழமை (3 ஆம் தேதி) இரவு 9:35 மணியளவில் நடைபெற்ற போக்குவரத்து விபத்து குறித்த புகாரைப் பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 44 மற்றும் 58 வயதுடைய இரண்டு ஆண் பாதசாரிகள் 36 வயதுடைய ஒரு பெண் பாதசாரி உள்ளிட்டோர் சுயநினைவுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த விபத்தில் தொடர்புடைய 45 வயது ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.