விஜய் படங்களை இனி ஒளிபரப்ப கூடாது..!! தடை கோரியது யார்..??

விஜய் படங்களை இனி ஒளிபரப்ப கூடாது..!! தடை கோரியது யார்..??

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவருமான விஜய் அவர்களின் திரைப்படங்களை தனியார் மற்றும் அரசு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் பாதையில் புதிதாக தடம் பதித்துள்ள விஜய் அவர்கள் தீவிரமாக தற்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் மார்ச் 25ஆம் தேதி அன்று காங்கிரஸ் மதுரை தெற்கு தொகுதி பொறுப்பாளர் சையது பாபு தேர்தல் ஆணையத்திடம் விருப்பமான ஒன்றை அழைத்துள்ளார்.

அந்த மனுவில் “விஜய் தற்போது ஓர் அரசியல் கட்சியின் தலைவராக போட்டியிடுகிறார் தொலைக்காட்சிகளில் அவருடைய பழைய திரைப்படங்களை தொடர்ந்து ஒளிபரப்புவது மறைமுகமாக அவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வது போல் அமைகிறது எனவே இது மற்ற வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் சமமான வாய்ப்புகளையும் பாதிக்கும் விதமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு நடிகர் விஜய் அவர்களின் பழைய படங்களை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என அவரது மனதில் தெரிவித்திருக்கிறார்.

இந்த மனு குறித்த தேர்தல் ஆணையம் இதுவரை இன்னும் அதிகாரப்பூர்வமான முடிவு இதுவும் அறிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை தேர்தல் ஆணையம் விஜய் படத்திற்கு தடை விதிக்கப்பட்டால், தேர்தல் முடியும் வரை (மே 2026) விஜய் நடித்த படங்கள் எந்த ஒரு தமிழ் ஒளி வழியிலும் ஒளிபரப்பு செய்யப்படாது. இது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK