வைரலாகும் வீடியோ..!! ஆபத்தான முறையில் சைக்கிள் ஓட்டிய இளைஞன்..!!
சிங்கப்பூரில் பொதுச் சாலையில் ஆபத்தான முறையில் மின்சார வாகனத்தை ஓட்டிய வீடியோ பதிவானது தற்போது sgfollowsall என்ற சமூக ஊடகத்தின் மூலமாக இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நபரின் செயல்கள் குறித்து நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களை கூறுகின்றனர்.
வைரலாகி வரும் இந்த வீடியோ பதிவில் கருப்பு நிற உடை அணிந்த ஒரு இளைஞன் மின்சார பைக்கில் உள்ள இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டு ஹெல்மெட் கூட அணியாமல் ஆபத்தான முறையில் பொதுசாலையில் வாகனம் ஓட்டுவது பதிவாகியுள்ளது.
இணையத்தில் பார்ப்பவர்கள் சிலர் இந்த இளைஞனின் நடத்தையை கண்டித்து பல கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அவையாவன: “தங்களுக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்க வேண்டாம்” என்று முக்கிய கருத்தினை பதிவிட்டுள்ளனர்.
சிலர் போக்குவரத்து காவல்துறை மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அக்கவுண்ட்டை டேக் செய்து மற்ற சாலை பணியாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய இத்தகைய நடத்தை தவறிய செயல்களை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட துறைகள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
நிலப் போக்குவரத்து ஆணையம் மின் பைக் ஓட்டுபவர்கள் குறைந்தபட்ச வயதான 16 நிரம்பி இருக்க வேண்டும் என்றும் மேலும் வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக முறையில் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறது.
வாகனம் ஓட்டுவதற்கு உரிய வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும் மேலும் சாலைகள் மற்றும் பூங்கா நடைபாதைகள் போன்ற பகிரப்பட்ட பாதைகளில் மட்டுமே வாகனம் ஓடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றன நடைபாதைகளில் ஓட்டுவது குறைந்தபட்ச வயதினர் தவிர்ப்பது நல்லது.