சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கான எச்சரிக்கை! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கான எச்சரிக்கை! !என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

ALL BOY SERVICE,Call Girls SERVICE,otp இதுபோன்று
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைத்து பல ஏமாற்று வேலைகள் நடக்கிறது அதில் சிலவற்றை இதில் பார்ப்போம்.

இதுபோல் உங்களுக்கும் நடக்க வாய்ப்புள்ளது அதனால் இதை முழுமையாக படித்துவிட்டு உன்னை எச்சரிக்கையாக இருக்கவும்.

CALL BOY SERVICE.
நமது வாசகர் ஒருவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். அவர் சில இணையதளம் மூலம் Call boy service மூலம் நீங்கள் சம்பாதிக்கலாம் என்று சொல்லி அவரை தொடர்பு கொண்டு உள்ளனர்.

அவரைத் தொடர்பு கொண்டவர்கள் சிங்கப்பூரில் இல்லை.

அவர்கள் சொன்னது என்னவென்றால் நீங்கள் சிங்கப்பூரில் உள்ள சில பெண்களை சந்தோஷப்படுத்தினால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று சொல்லி ஆசை வார்த்தை காட்டி உள்ளனர் அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.

இது போன்ற பெண்களை நாங்கள் அறிமுகப்படுத்த எங்களுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர் அவரும் அவர்களுக்கு 500 சிங்கப்பூர் வெள்ளி மாற்றி உள்ளார்.

பிறகு சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் வாசலில் போய் நிக்க சொல்லி உள்ளனர்.

இவரும் போய் நின்று உள்ளார்.

பிறகு இவர் பெயரில் ஒரு சிம்கார்டு வாங்க சொல்லி உள்ளனர்.

இவரும் வாங்கி ஓடிபி கொடுத்துள்ளார் பிறகு இவருக்கு அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை அந்த நம்பரில் புதிதாக சிங்கப்பூரில் வாட்ஸ் அப்பை ஓப்பன் பண்ணி உள்ளனர்.

அதை அறிந்தவுடன் இவர் புதிதாக இவர் போனிலேயே அந்த வாட்ஸ் அப்பை ஓப்பன் பண்ணி அவர்களது வாட்ஸ் அப்பை க்ளோஸ் செய்து விட்டார்.

இவர் இவருக்கு அவர்கள் சரியாக பதில் அளிக்கவும் இல்லை இவருடைய 500 வெள்ளி இழந்துவிட்டார்.

இதுபோன்று உங்களுக்கும் நடக்கலாம் அவர் என்னுடைய பணம் போனது போல் நமது தமிழர்கள் வேறு யாரும் ஏமாறக்கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி நம்மிடம் கேட்டுக் கொண்டார்.

ஒருவேளை இவரது வாட்ஸ் அப்பை மட்டும் இவர் புதிதாகவோ ஓபன் பண்ணாவிட்டால் இவரது நம்பரை வைத்து அவர்கள் பல திருட்டு வேலைகளை செய்திருப்பார்கள் அதனால் இவர் காவல் துறையிடம் சிக்கி இருப்பார்.

2.Call girl service

இதேபோன்று call girl என்று சொல்லி பெண்கள் உங்களை சந்தோஷப்படுத்துவார்கள் நீங்கள் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று சொல்வார்கள்.

நீங்கள் அவர்களுக்கு பணத்தை செலுத்தினால் அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராது. உங்கள் ஆசையை தூண்ட பல பெண்களின் புகைப்படத்தை உங்களுக்கு அனுப்புவார்கள்.

தயவு செய்து இது போன்ற யாரிடமும் ஏமாந்து விடாதீர்கள்.

3.Police video call

சிங்கப்பூர் காவல்துறை போன்றே உங்களுக்கு வாட்ஸ் அப் வீடியோ காலில் அழைப்பு வரும் அதில் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் ஒரு சில சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி உங்களை கைது செய்யப் போவதாக மிரட்டி உங்களிடம் otp கேட்பார்கள் நீங்கள் அதைக் கொடுத்து விட்டால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் இது போன்ற அழைப்புகள் வந்தால் நீங்கள் பதட்டப்படாமல் நான் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று பேசிக்கொள்கிறேன் என்று போனை வைத்து விடுங்கள் காவல்துறை அதிகாரிகள் யாரும் உங்களுடைய ஒடிபியை கேட்க மாட்டார்கள் அதற்கு அவர்களுக்கு எந்தவித அனுமதியும் கிடையாது.

இது போன்ற பெரும்பாலான ஏமாற்று வேலைகள் வெளிநாட்டு ஊழியர்களை குறி வைத்து நடக்கிறது இதனால் கவனமாக இருக்கவும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan