அதிமுக - தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..?
அதிமுகவை உடைத்து தவெகவுடன் கூட்டணி அமைப்பது ஈஸி இல்லை! பாயும் கட்சித் தாவல் தடைச் சட்டம்!
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தவெகவுடன் இணைந்து செயல்பட நினைக்கும் அதிமுகவின் ஒரு தரப்புக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதிய சிக்கல் உருவாகி உள்ளது.
அதிமுகவில் சி.வி. சண்முகம் தலைமையிலான பிரிவினர் தவெகவுடன் கூட்டணி அமைக்கவோ அல்லது இணையவோ திட்டமிட்டால், அவர்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 91-வது திருத்தத்தின்படி, ஒரு கட்சியில் இருந்து பிரிந்து செல்லவோ அல்லது மற்றொரு கட்சியுடன் இணையவோ குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்த விதியின்படி, அதிமுகவில் இருந்து ஒரு குறிப்பிட்ட பிரிவு பிரிந்து செல்லவோ அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து செயல்படவோ வேண்டும் என்றால், மொத்தம் உள்ள 47 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கான 32 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கட்டாயமாகும். இந்த எண்ணிக்கையை விடக் குறைவான எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.