அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!!

அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!!

ஐக்கிய இராஜ்ஜியத்துடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி மற்றும் சிவில் அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டது.

கடந்த வாரம் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் நேற்று (15.12.25) உறுதிப்படுத்தியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு அப்பால் பிற துறைகளிலும் அமெரிக்காவிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உணவு மற்றும் தொழில்துறை பொருட்களை நிர்வகிக்கும் விதிமுறைகள் உள்ளிட்ட வரி அல்லாத தடைகளை தளர்த்த இங்கிலாந்து தயக்கம் காட்டுவது அமெரிக்காவை மேலும் விரக்தியடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,இந்த தகவல்களின் உண்மைத்தன்மையை தற்போது உறுதிப்படுத்த முடியாது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், வெள்ளை மாளிகையோ அல்லது பிரிட்டிஷ் அரசாங்கமோ இது தொடர்பான கேள்விகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK