சாலை விபத்தில் சிக்கிய பெண் ஓட்டுநரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கடந்த வாரம் சனிக்கிழமை ஜூலை 26 அன்று சிங்கப்பூர் தஞ்சோம் காஷின் சாலையில் திடீரென ஏற்பட்ட புதைக் குழியில் ஒரு பெண் ஓட்டுனர் மற்றும் அவரது காரும் சிக்கியதை அடுத்து அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த 7 வெளிநாட்டு ஊழியர்கள் கயிற்றை பயன்படுத்தி விரைவில் அவரை மீட்க செயல்பட்டனர்.
இந்த துணிச்சலான செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
மேலும் இத்தகைய செயலை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி தர்மன் சண்முக ரத்தினம் அவர்களும் இதை குறித்த செய்தி அறிக்கையை சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
இந்த ஏழு பேர் அடங்கிய குழுவின் மேற்பார்வையாளர் பிச்சை உடையப்பன் சுப்பையாவை பாராட்டியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
சமூக இணையதள பக்கத்தில் அதிகம் பகிரப்பட்ட செய்திகளில் ஒன்றான இந்த சம்பவம் பற்றி இணையவாசியுள் ஒருவர் இஸ்தானா தேசிய தின திறந்தவெளி இல்லத்திற்கு இந்த ஏழு வெளிநாட்டு ஊழியர்களை கட்டாயம் அழைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலாக ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் கூறியதாவது, “முற்றிலும் நன்றி பலரைப் போலவே நானும் இதை தான் செய்ய விரும்புகிறேன்”.
என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் பேசுகையில் புதைக் குழியில் சிக்கிய பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்ட துணிச்சல் மிக்க இந்த ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 3 நடைபெற உள்ள ஜனாதிபதி மாளிகை திறப்பு நாளில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளதாக இவர் உறுதிப்படுத்தினார்.