இந்தியா, சீனா உட்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி!! ஏன்? எதற்கு?

ரஷ்யாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உட்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி: அமெரிக்க செனட் சபையில் மசோதா தாக்கல்!
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பதற்கான புதிய மசோதா ஒன்று அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது உலகளாவிய வர்த்தகம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி: உக்ரைன் – ரஷ்யா மோதல்
ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா மோதலை தொடுத்து, இந்தப் மோதல் இன்னும் நீடித்து வருகிறது. உக்ரைன்-ரஷ்யா இடையேயான மோதலை விரும்பாத அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மோதலை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மோதலை நடத்த ரஷ்யாவுக்கு முக்கிய நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவையாகும்.
எனவே, ரஷ்யாவிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதைத் தடுத்துவிட்டால், ரஷ்யாவுக்கு மோதலை நடத்தத் தேவையான நிதி கிடைக்காது என்று டிரம்ப் கணக்கு போட்டார். இதன் காரணமாக, ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்ததுடன், ரஷ்யாவிடம் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிகமான வரியும் விதித்தார்.
25 சதவீத கூடுதல் வரி
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எனவே, இந்நிளையில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரி விதித்தார். இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன், இக்கூடுதல் வரி திரும்பப் பெறப்பட்டது.
இருப்பினும், சில மாதங்களுக்கு முன்பு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். இதுதொடர்பான மசோதாவும் உருவாக்கப்பட்டது. ஆனால், பல்வேறு நாடுகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த முயற்சியை டிரம்ப் கைவிட்டார்.
100 சதவீத வரி மசோதா
அதே சமயத்தில், ரஷ்யாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, சுலோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மற்றொரு மசோதாவை ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர் ரிச்சர்டு புளூமெந்தல் மற்றும் குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் ஆகியோர் இணைந்து உருவாக்கினர்.
செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் கடந்த 11-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் அவரது நினைவாக இப்புதிய மசோதாவிற்கு ‘லிண்ட்சே ஜி கிரஹாம் ரஷ்ய பொருளாதார தடை சட்டம்-2026’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கும் இந்த 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க இமசோதா வகை செய்கிறது. அதாவது, இந்த 5 நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும்.
60 எம்.பி.க்கள் ஆதரவுடன் தாக்கல்
இந்த மசோதா, 60-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவுடன் அமெரிக்க செனட் சபையில் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்பட்டது. ரஷ்யாவின் அரசியல் தலைமை, நிதி அமைப்புகள், எரிசக்தி துறை ஆகியவற்றின் மீது கட்டாய பொருளாதார தடை விதிப்பதன் மூலம், உக்ரைன் போரை நடத்த தேவையான நிதி ரஷ்ய அதிபர் புதினுக்கு கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதே இம்மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், ரஷ்யாவிடம் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கும் 5 நாடுகள், எவ்வளவு கச்சா எண்ணெய் வாங்குகின்றன என்பதை 180 நாட்களுக்கு ஒரு தடவை மறுஆய்வு செய்து, எண்ணெய் கொள்முதலுக்கு ஏற்ப வரிவிதிப்பை மாற்றி அமைக்குமாறு அமெரிக்க வர்த்தக பிரதிநிதியை இம்மசோதா கேட்டுக்கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு விலக்கு
அதே சமயத்தில், ரஷ்யாவிடம் கியாஸ் வாங்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த 100 சதவீத வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தங்களது மொத்த கியாஸ் தேவையில் 15 சதவீதம் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதால், அந்த நாடுகளுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, தனது அணு உலைகளுக்கு ரஷ்யாவிடம் அமெரிக்கா வாங்கும் யுரேனியத்துக்கும் இம்மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி, விண்வெளி ஆகிய துறைகளில் அமெரிக்க-ரஷ்ய கூட்டுறவின் கீழ் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மற்றொரு நாட்டுடன் போர் புரியும் நாடுகளுக்கு நிதி அளிக்கும் நாடுகளைத் தன் புவி அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதை அமெரிக்க நாடாளுமன்றம் வெளிப்படையாக அங்கீகரிப்பதாகக் கருதப்படும்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
