காவல்துறையின் திடீர் அமலாக்க நடவடிக்கையில் பிடிபட்ட 36 பேர்..!!! காரணம்..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போலீசார் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 36 பேரை விசாரித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் 16 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களின் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் S$10,000க்கும் அதிகமான தொகை போலீசார் முடக்கியுள்ளனர்.
36 பேரில் 13 பேர் சட்டவிரோத சூதாட்ட வலைத்தளங்கள் அல்லது மொபைல் பயன்பாடுகள் மூலம் சூதாட்டம் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.
மேலும் சிலர் சட்டவிரோத சூதாட்டக் குழுக்களுக்கு வங்கிக் கணக்குகள் அல்லது சிங்பாஸ் உள்நுழைவுத் தகவல்களை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் படி, உரிமம் பெறாத சூதாட்டக்காரர்களுக்கு $10,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அல்லது குற்றச் செயல்களை எளிதாக்குபவர்கள் மீது அமலாக்க நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் அனைத்து வகையான சட்டவிரோத சூதாட்டங்களிலிருந்தும் விலகி இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது
சூதாட்டத் தடுப்புக்கு உதவி தேவைப்படும் பொதுமக்கள் தேசிய சூதாட்டத் தடுப்பு ஹாட்லைன் (1800-6668-668) அல்லது www.ncpg.org.sg மூலம் உதவி பெறலாம்.