23 முதல் 68 வயதிற்கு உட்பட்ட ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களும் சாலையின் வெவ்வேறு இடங்களில் பாதைகள் மாறி வாகனம் ஓட்டும் போது கவனம் இன்றி ஓட்டியதால், மூன்று சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அதன் பின்னால் இருந்த ஒரு பயணி ஒரு பாதசாரி காயமடைந்துள்ளனர்.
இந்த காரணத்திற்காக காவல்துறையினர் ஏழு பேரை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
கைது செய்த ஏழு பேரை நீதிமன்றத்தில் இன்று காவல்துறையினர் ஆஜர் படுத்தியுள்ளனர். உடல் ரீதியாக காயம் ஏற்படுத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டால் குற்றவாளிகளுக்கும் $5,000 வரை அபராதம் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
குற்றவாளிக்கு $2,500 வரை அபராதம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் பிரிக்கப்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.