கேலாங் சண்டையில் ஆபத்தான நிலையில் இருந்த 70 வயது முதியவர்..!! உயிர் பிழைத்தாரா..??
சிங்கப்பூரில் நேற்று (மார்ச் 9) காலை 70 வயது முதியவரை 48 வயது நபர் ஒருவர் பலமாக தாக்கியுள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. அவ்வப்போது முதியவரை 48 வயது ஆடவர் கத்தியால் தாக்கியுள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரையுமே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவ்வப்போது மயங்கிய நிலையில் இருந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக காவல்துறையினர் நேற்று (மார்ச் 9) மாலை அறிக்கையை வெளியிட்டனர்.
முதற்கட்ட விசாரணையின் போது, இருவருமே ஒருவருக்கொருவர் தெரிந்தவர் எனவும் ஆபத்தான கத்தியால் வேண்டுமென்றே குத்தி காயம் ஏற்படுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இருவருக்கும் இடையே நிதி தொடர்பில் தகராறு இருந்ததாகவும் இதனால் சண்டை ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், இறந்து போன 70வயது முதியவரின் முன்னாள் முதலாளி கூறியுள்ளார்.