கேலாங்கில் கார் விபத்தில் 77 வயது முதியவர் உயிரிழப்பு…!!! இது தொடர்பான மேலும் விவரங்களை அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!!!

கேலாங்கில் கார் விபத்தில் 77 வயது முதியவர் உயிரிழப்பு...!!! இது தொடர்பான மேலும் விவரங்களை அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கேலாங் பகுதியில் அமைந்துள்ள எஸ்ஸோ பெட்ரோல் நிலையத்தில் ஜூன் 28ஆம் தேதி அதிகாலை நடந்த ஒரு கார் விபத்தில் 77 வயது பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக 24 வயது ஆண் ஓட்டுநர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் அதிகாலை 2:20 மணியளவில் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களது விசாரணையில், பாதிக்கப்பட்ட மூத்த ஊழியர் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில், சாட்சிகளைத் தேடும் நோக்கில் போலீசார் “சாட்சி தேடப்படுகிறது” எனும் அறிவிப்புப் பலகையை வைத்து விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஃபேர்பிரைஸ் குழுமம் உறுதிப்படுத்திய தகவலின்படி, சம்பந்தப்பட்ட ஊழியர் நிறுவத்தில் பணியாற்றி வந்தவர் என்பது தெளிவாகியுள்ளது.

அவரது மரணம் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு நிறுவனம் சார்பாக அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan